May 30, 2015

முத்தம் !!

முத்தம் !!

உலகின் முதல் காதலனாம்,
ஆதாமின் இதழ் கண்ட முத்தம் !!
எச்சில் மொழியாய் அர்த்தம் சேர்க்கும்,
மழலை இதழ் சொல்லும் முத்தம் !!
பசி என்னும் பாத்திரத்தின் உயிர் ஊற்றி,
தனை நிறைக்கும் தாயின் முதல் முத்தம் !!
கரு சுமக்கா மீசைச்  சொந்தமாய்  விரல் கோர்,
வழி நிறைக்கும் எந்தை முத்தம் !!
இதழ்கள் வேறு எனினும் சுவை ஓன்று,
அன்பு என்னும் அடைமொழிக்குள் !!

-சுந்தர்.ப

Nov 27, 2014

அன்னா கரீனீனா - டால்ஸ்டாய் !!


மழை ஓய்ந்தும் உதிர்ந்து போகா விரழிடை சகதிகள் !
போதுமிக்கிடக்கும் மன விழும்புகளாய் - ஒரு எழுத்தாளனின்,
கனத்து போன நாட்காட்டி உந்தல்கள் விரயங்களின் சிதறல்கள் தான் !!
காதல் என்னும் மதநீர்ச் சுரப்பிகள் என்றும் காலம் தாண்டி-
மீள் வினைகளாய் பிசுபிசுக்கின்றன !!
-சுந்தர்.ப  

தியானித்து மெளனம் கலைக்கும் யாசகன் !!


தியானித்து மெளனம் கலைக்கும் யாசகன் !
என் பாதங்களில் மண்டியிட்டு காத்துக் கிடக்கும் பயணங்கள் !
எனக்கான பாதைகளின் வழி காட்டும் - ஒரு தனிமை !
என்னுடன் ஒட்டிப்பிறந்து மூப்பாய் வளர்கிறது, எனை கடந்து போகாமல் !!
 -சுந்தர்.ப     

Nov 26, 2014

அழகு என்னும் ஓர் அழகு !!


மீட்டும் விரல் அழகு,
உயிர் உருகும் யாழிசை ஓர் அழகு !
குவளைக் காதழகு,
அவள் இதழ் பதித்தாள் தேநீர்ச் சுவை அழகு !
பூப்பில் பெண் அழகு,
முந்திக் கொள்ளும் தாய்மை என்னும் பேரழகு !
மொளனம் ஓர் அழகு,
அதில் விழி பேசும் மொழி அழகு !
மழலை குறும்பு அழகு,
துயில்கையில் தும்பைப் பூ அழகு !
நித்திரையில் மதி அழகு, சொப்பணம் நூறழகு !
மழைக் கால முற்றங்களும்,
மணக் கோல தோரணங்களும் என்றும் அழகு !
நோய்க்கு மருந்தழகு,
 உறவின் கதகதப்பில் நோயும் ஓர் அழகு !
தனிமை ஓர் அழகு, தோள் சாய்ந்தால் ஈரழகு !
பால் குட நீர் அழகு, பசி என்றும் பேரழகு !
முதுமை முழு அழகு,
மழலை விரல் நனைத்தாள் கூடும் ஓர் அழகு !
நட்பென்னும் தேர் அழகு,
நின்றாலும் நகர்ந்தாலும் பேரழகு !
திருவிழாக் காலங்களும்,
திரி சங்கு மடங்களும் நினைத்தாலே அழகு !
வாழ்வை அழகாக்கும் காதல் என்னும் தீ அழகு !
கண்ணீர்த் துளி அழகு, காரணங்கள் ஒத்தி வைத்தாள் !
திருமணத் தோள் என்றும், துறவுக்கு முன் அழகு !
இரவின் நிறம் அழகு, நித்திரைக்குள் நிலவு அழகு !
தூரத்து ஊர் அழகு, மழைக் குடைக்குள் குளிர் அழகு !
கோப,தபங்களும் சிறு நேரம் தான் அழகு !
கடை விழி தனைத் தாண்டா காமமும் ஓர் அழகு !
தாய் என்னும் நிறைவு அழகு, தாரம் அது மீதி அழகு !

-      - சுந்தர்.

மகள் என்னும் மழை அழகு !!


மழையும் என் மகளும் ஈரழகு!! ஊன் கலந்தால் நூறழகு !!

பால் மணம் வழிந்தோடும் தும்பைப் பூம்விரல்கள் - (மகள்)
மண் மணம் உயிர்ஜெனிக்கும் ஆதாரத் தேன் துளிகள் – (மழை)
மழலை மொழியாவும் மதி தின்னும் மாருதங்கள் - (மகள்)
அடி வானின் நற்றனமாய் முனுமுனுக்கும் மத்தளங்கள் - (மழை)
சீன்டலும் தீண்டலுமாய் ஒரு நூறுப் பொற்க்கரங்கள் - (மகள்)
அள்ளி நெஞ்சனைக்கும் ஆயிரம் மழைத் துளிகள் - (மழை)
வாழ்வில் அர்த்தப்படும் அழகிய மணித்துளிகள் - (மகள்)
சாரலின் கோர்வையில் தோல் உரிக்கும் நீர் நிலைகள் - (மழை)
பூப்பின் பூரணமாய் தாமரை மதி முகங்கள் - (மகள்)
கார்மேகம் அடைத்து ஒழுகும் அடை மழைத் தோரணங்கள் - (மழை)
நிறம் மாறும் பூவனமாய் தினம் ஒரு முகம் புனைந்து,
மகள் என்னும் பாத்திரத்தை புடம் செய்யும் பெண் இனம் - (மகள்)
திசை மாறும் பருவங்களின் திரை மூடும் மதி போல,
தினம் ஒரு புதுத் துளியாய் சுரம் சேர்க்கும் யாழினம் - (மழை)
திருமணம் எனும் ஓர் மலர் பூனும் மான் இனம்,
அவள் கோலம் அழகென்னும் அட்சையம் - (மகள்)
கடை விழி அலை ஆடும் குளக்கரையின்,
மழை விரிப்பில் ஈடாகும் அழகு ஏது - (மழை)
மகள் என்னும் மகள் ஈந்த - மழலை
முடிச்சு ஒன்று, கரம் ஏற்றி விழி நிறைக்க,
முன் ஜென்ம நியாபகமாய் மகரந்த மழை நனைந்து,
என் தாயின் கதகதப்பில் அடை காணும் முடிச்சானேன் - (மகள்)
மழை அழகு, மகள் அழகு,
ஓர் மழைக் கால பின் பொழுதில் நிழலாடும் நினைவு அழகு !!

-    -  சுந்தர்.ப

Nov 14, 2014

இமை நோகும் இரவுகள் துயில் -
தொலைக்கா கனவுகளின் பட்டியலை
என் பாய் விரிப்பில் உதிர்க்கிறது !! 
-சுந்தர்

Oct 31, 2014

அன்பு !!


             “ அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாள் ஆர்வலர்
               புன்கணீர் பூசல் தரும் “

v  மழைக் கால மனக்குழியின் ,
 மண்வாசம் கூச்சரிப்பாய் !
v  தும்பை  பூஞ்சிரிப்பின்
அதிகாலை  பாய் விரிப்பாய் !
v  மெளனத் தேன் தெளிக்கும்,
அன்பென்னும் ஓர் செண்பகப் பூ !
v  கருவறை கானங்களை விரல் நுனி
விருந்தாக்கும் அன்னை மனம் !
v  மழலை முகம் யாவும் மகள் என்னும்,
சுருதி சேர்க்கும் தந்தை குணம் !
v  எட்டாப் பொருளாய் பசிப்பிணி
தீர்க்கும் தெய்வப் பதம் !
v  பயிர் வாட , மனம் வாடும் மார்க்கங்களின்
 பிள்ளை முகம் !
v  ஏழ்மை தோள் தாங்கும் தோழன்
என்னும் தேரின் திடம் !
v  கரம் நோக கொடை ஈனும்
அறம் சேர் மன்னர் இனம் !
v  இரத்த சொந்தங்களின் எல்லை தாண்டி அன்பில்
பதைப் பதைக்கும் ஏழை குணம் !   
v  சாதி மாத ஆழிகளின் இடை தாண்டி
அடி வானில் அர்த்தப்படும் அன்பின் நிறம் !
v  அன்பு என்னும் மூர்க்கத்தை அடிநாத வலை விரிப்பாய்
உயிர் காக்கும் பூமித்தாயின் பால் மணம் !


-சுந்தர்.

Oct 8, 2014

அறம்



அறம் ஏற்றும் ஆர்ப்பறிப்புகளில்,
ஊறித் திளைக்கும் - நாட்குறிப்புகளின்,
தடம் இல்லாத் தாழ்வாரங்கள்
மொவ்னமாய் மழை ஈனுகின்றன !
ஒட்டிப் பிறந்தவன் - என்றும்,
அறம் உதிர்க்கும் காரணங்களை
அடிக் கோடிட்டு காட்டுவதில்லை !!
ப.சுந்தர்.
(அறம் - ஜெய மோகன் !!)

முக்தி !!


கண்டீபம் கடை நோக,
கார் முகில் விழி நோக !
தமிழ் யானை தந்தம் கொண்டு,
ஏர் ஓடும் உழவன் உண்டு !
வள்ளுவம் வான் நிறைக்க,
வைகறை தேன் தெளிக்கும் !
வாழ்வின் முடிச்சு அவிழ்க்கும்,
பாரத போர் முழக்கம் !
மந்திரம் தந்தைக்கு என்று,
வழக்குறை பிள்ளை உண்டு !
ஏகலை சாத்தியமும் ஆயிரம்,
மண்ணில் உண்டு !
அறம் இன்றி அமையா
உலகென்று என்றும் உண்டு !
முடி துறந்து இடை மெலிந்து,
யாத்திரம் என்பதெல்லாம் !
குருவின் அடிதேடி
முக்தியின் மீட்டலுக்கே !
குரு வென்பது யாதெனில்,
அகம் தேடும் பாதை ஒன்றே !!
- ப.சுந்தர்

Sep 10, 2014

என் பெயர் இல்லாக் காதல் அம்மா !!





















கார்கோட மேகம் ஓன்று சீறிச் சிந்தும் திவளைகளில்
சிலிர்த்தது இந்த காதல் விந்து !

இருள் தின்னும் அந்தி நுழைவுக்குள் நெஞ்சுறைய
கொட்டித் தீர்த்த  மழைக்காலம் ஓன்று !

ஒரு திங்கள் கூத்தாடிகளின் படையெடுப்பாய்,
எனை மொய்த்த காதல் ஈசல் !

நெஞ்சனைக்க காத்து நின்ற காலம் யாவும்,
மூச்சிறைக்க முட்டிக்கொண்ட நேரம் அது !

மலர் உண்ணும் காதல் வண்டு ஓன்று செவி நுழைய
துடித்தனன் காளை உள்ளம் !

துயிழாது, துவளாது, தூரத்துப் பாவை -
விழி உண்ணும் விரதம் கொண்டு !

வண்டு உடைத்த மாங்கனியாய் காதல் கனிய,
அவள் அந்தரங்க மனக்குகையில் மாட்டிக்கொண்ட
பேதை வண்டினம் நான் !

தேன் உண்ணும் தொழில் மறந்து, மலர் உண்ணும்
வண்டானால், ஊடல் இன்றி போவதுண்டோ !

அவள் ஊடல் என்னும் மொட்டு உதிர்க்க,
மோகம் தான் கூடுது இங்கே !

அவள் வண்டு உண்ணும் மலர் ஆனால்,
எனை உண்ணும் இதழ் தேன் சுவை தானே !

ஊடல் கொஞ்சம், கூடல் கொஞ்சம்
மாறி மாறித் தேடிக்கொண்டேன் !

பேடை அவள் காதலுக்கு கார்முகில்
தூது சொன்னேன் !

காலம் தாண்டி கூடி நின்றும்,
காதல் என் கையில் அன்றோ !

அறியக் காலம் கொண்டு அலைந்து,
தேடிக் காதல் இன்று !

எனைக் கொஞ்சம் அவள் சேர்த்து,
எனில் கொஞ்சம் அவள் சேர்ந்து !

கூடாத மஞ்சம் கூட,
அவள் வாசம் சூடிக் கொள்ள !

சேரா திசை எட்டும்,
காதல் சிந்தி காதல் ஆகும் !

மதியை ஒரு மகள்,
கார்குழல் சூடி நின்றாள் !

தேக விருந்துண்ணும் சூத்திரம்
தேடிச் சொன்னால் !

முத்து ஒழுகும் மஞ்சத் திறவுகள்,
தனில் ஏந்தும் மாதுளையே !

அவள் மாடக் கூடலிலே,
மோகம் தின்னுத் தெளிந்தேன் !

காணும் திசை எங்கும் நான் விதைத்தேன்,
காதல் இதழ் செழிக்க அவள் தேன் தெளித்தாள் !

காதல் எனும் கொட்டகைக்குள்,
என் காதல் அடைப்பதற்க்கில்லை !

மோகக் தியான காமம் என்னும்,
அஞ்சரைக்கும் சொந்தம் இல்லை !

உயிர் ஜெனிக்கா குழந்தை போல,

என் பெயர் இல்லாக் காதல் அம்மா !! 


சுந்தர்.ப