Dec 21, 2013

ஒரு பனித்துளி தாகம் !!




ஒரு பனித்துளி தாகம் !!

திங்கள் முகம் மறந்து,
திண்ணை எங்கும் உடல் நனைந்து !

மஞ்சள் வெயில் துறந்து,
மல்லிகை இதழ் நுழைந்து !

மார்கழி மதி முகத்தை,
பசலையாய் பால் திரிந்து !

அதிகாலைப் பாய் விரிப்பாய்,
நுனிப்புல் உடல் குழைந்து !

ஆதவன் நாளங்களும்,
அர்த்தம் அற்று குளிர் நடுங்க !

கனவோடு என் தாகங்களும்,
தயங்குது உனைக் கண்டு !

காற்றில் கை வீசி,
அள்ளி உன்னை நான் பருக !

தொண்டைக் குழி தாண்டா,
விரதம் தான் உன்னில் ஏனோ !

நின் முகம் கூட,
கானலின் சாயல் தானோ !

நிலம் நனைத்தும்,
தன்னில் அடங்கா நின் தாகம் !

அது போல் தானோ,
உறவு என்னும் சுனை நீரும் !

அடி முட்டும் மலை ஓங்கி !
அதில் கொஞ்சம் சுனை ஏந்தி !
இதழ் நனைத்து, குரல் நனைத்து !
இதயக் குவளை நிறைத்து !

தள்ளாடும் சொந்தகளாய்,
விரிசல் வழி கசிந்தனவே !

புன்னியத் தீர்த்தம் யாவும்,
தாகம் தீர்த்தச் சுவடில்லை !

உனைப் போல பனித்துளியே !

ஒரு பனித்துளி தாகம் !!
- சுந்தர் .ப
21/12/2013, 10:15pm.

Dec 16, 2013

வார்த்தை வழுக்கல் !


சொற்களால் புரண்டோடும் வாழ்க்கைப் பிறவாங்கள்,
என்னில் என்றும் நிழல் ஆடும் -
பின்பங்களால் சாத்தியப் படுகின்றன !
ஆதலால் தானோ !
பின்பச் சாயங்களைத் துடைத் தெரிந்தும்,
என் நெஞ்சில்,
வார்த்தைகள் ஒட்டிக் கொள்ளாமல் வழுக்கிச் செல்கின்றன !

-    சுந்தர் .ப 




எனை ஆண்டாள் !!

எனை ஆண்டாள் !!
-         
சீதை தீண்ட இவன் யாழ் ஏந்தும் இராவணன் அல்ல !
என் நெஞ்சம் என்றும் ராதைக்கே – எனை
ஆண்டாளும் அவளே !

பருவம் தப்பாக் காதல் சொல்லும் –
கண்ணன் பார்வை நீள
இம் மண்ணுலக மான் விழிகள் யாவும் -
அவனுக்கு அன்றி,
மாற்றம் என்றும் இவன் நெஞ்சிற்கு அன்றே !

விரதம் மீறா விரகம் ஏந்தும் அந்த -
கடை தாண்டாக்  கயல்விழிக்கு உரியாள் !
அவள் நிழல் தேட இவன் என்றும் அறம் பிறழான் !

காதல் உண்ணும் காலத்தும் தாகம் தீரா
கண்ணன் பிறழ் மோக நிலை என்றும் –
அந்த கோதை கொள்வதில்லை !

ஆதலால் ஏனோ !
கண்ணன் அல்லா பிற கண்ணங்களின் நிழல்
அவள் கடைவிழி தீண்டித் தோற்க் கின்றன !   
-             - சுந்தர் .ப 

கனவு என் புரிதலின் மதநீர்ச் சுரப்பிகள் !!


கனவு என் புரிதலின் மதநீர்ச் சுரப்பிகள் !!

கட்டவிழ்க்கா காலச் சிதறல்களை 
கனத்துப் போகா எச்சரிக்கும் !     

என் புனை உலகின் வெந்நீர் ஊற்றுகளாய், -
இரவுகளை கதகதப்பில் மீட்க்கும் !

முட்டித் தீர்க்கும் காலக் கொடுமைகளை, 
தட்டிக் கொடுத்து தனல் ஆற்றும் !

பசித்துக் கிடக்கும் பகலவன் கரங்களை, 
பால் நிலவில் பசி ஆற்றும் !

வர்ணம் மறந்த பகல் நேரப் பக்கங்களை -
கருப்பு, வெள்ளையில் எத்தனிக்கும் !

பகல் கூட இடம் கொடுத்தால் புனை தொழில் புரியும் ! 

மூன்று காலங்களையும் முன் பரப்பி, 
ஆசைதீரத் தின்று தீர்க்கும் !

நிழலாடும் குரோதங்களை மதி -
மயங்கி, இழைப்பாறச் செய்யும் !

குரல் மங்கும் தூரங்களை, சலனம் இல்லாச் -
சாடலில், மதில் தாண்டும் !

நிலம் சாயும் மேகங்களை, திரை மறைவில் 
தாங்கிக் கொள் தோழன் அது !

விரல் தனித்துப் போகாப் பயணங்களை, என்னில்
பழக்கப்படுத்திக் கொள்ளும் !

இந்த மதகுகள்
மதம் கொஞ்சம், பலம் மிஞ்சும் -
பாதைகளை என் பாதங்களில் விதைக்கிறது !

-    சுந்தர்.ப 

Dec 10, 2013

 

காதலில் முத்துமிழ்ந்து
தாய்ப்பால் இதழ் நனைந்து 
காம மோக கடை நடந்து 

துணையாள் துயிழ் உகந்து 
மகளாய் தமிழ் பயின்றாள் !
வாழ்வியல் பட்டியலின் 
அத்தனை பக்கங்களையும் 
ஒரு சொல் விடையாய் நிரப்பினாள் !

-சுந்தர் .ப 

என் கவிதைப் பூச்சிகளை தன் இசைவிற்கு வாலாட்ட 
ஒப்புக்கொண்டான் ஒரு தோழன் !!

அதன் புணர்தலும் அவனே !!
-சுந்தர்

நீ வேண்டும் என் விழி தொடும் தூரம் !!



அரிதாரங்கள் முகவரியாய் ஆன பின்பு 
அடையாளங்கள் வீண் சுமையாய் கூன் இழுக்கிறது !!


-சுந்தர் .ப 

சந்தைப் பிரவேசம்

விருப்பம் இன்றியும் வாங்கி திங்க ஆசை கொண்டு 
பாட்டியோடு ஒரு காத தூரம் நடந்து வந்த சந்தை பிரவேசம் 
என் பால்யத்தின் பாக்கியம் தான் ! 

எஞ்சிய ஆண்டுகளுக்கு பின் இன்று ஒரு சந்தை பயணம் 
அதை நியாபகம் கொண்டது !

சந்தைகளின் வாசமும், வழக்கங்களும்
எந்த தேசத்திலும் மாறுவதில்லை !

பூட்டி வாய்த்த நோட்டுப்புத்தகங்களின் மாறாத
வாசமாய் சந்தை மனிதர்களின் வியாபார உக்திகளும்,
பேச்சிகளும், தோரணைகளுமாய் நீளுகிறது
சந்தைகளின் நேரம் !

படையல் போட்ட காய்கறி சிதறல்களாய்
தரையில் விதைக்கப்பட்ட குவியல்கள்
அதன் மாறா அடையாளம் !

வெயிலின் துளியும், வியர்வை
மொழியும் அதன் அங்கிகாரம் !

வீடு திரும்பியும் சந்தைகளின் கூக்குரல்
செவிக்கூசா ரீங்காரமாய் நாட்களை
நிறைவு செய்கின்றன !!

சந்தைப் பிரவேசம் !
-சுந்தர்.

Dec 6, 2013

பிள்ளை நிழல் !



பிள்ளை நிழல் !

என் வர்ணனையில் பிறக்கும் -சிறு
தாழம்பூ நாணத்தை நுனி மூக்கின் கோபத்தில்
மறைக்கும் அந்த வாதமும்

தன்னை வாசிக்க இடம் தந்ததும் இல்லை,
என்னை நேசிக்க கனம்  இல்லை !! 

ஆண்மையின் ஆழத்தை காட்டித்தந்தாள்
அதில் கொஞ்சம் பெண்மையையும் ஊற்றி சென்றால் !!   

என்னை ஆட்கொள்ளும், பின் மீட்டெடுக்கும்
வித்தையும் கொண்டால் !!

என் மௌனம் கலைக்கா புல்லாங்குழல்,
தன் நிஜம் மாறா சிறு பிள்ளை நிழல் !!

-சுந்தர்.ப 

யசோதைக்கும் ராதைக்கும் வண்ணம் ஒன்று !!



ஒரு பொழுதில் மடி தழுவும் பிள்ளை இரண்டு !
யசோதைக்கும் ராதைக்கும் வண்ணம் ஒன்று !

மண்ணை உண்ட கண்ணன் தான் மஞ்சம் வென்றான்   !
வென்றவன் தான் கை நீட்டி வெண்ணெய் என்றான்  !

கண்ணன்  தான் மன்னன் என்னும் கோதை உள்ளம் !  
கண்ணனா நானா என்றால் என்னவாகும் !

மடி இரண்டு விழி இரண்டு தந்த கண்ணா ன்  !
ஒரு நெஞ்சில் இருதலை அன்பை பற்று வைத்தான்  ! 

அணுவிற்கும் அனுபவம் கற்றுத்தந்தான்!
நாடகம் அரங்கேற  இன்றோர் மேடை கொண்டான் ! 

ஒருபொழுதும்  கலங்கா கோதை உள்ளம்
இரு பொருள் வரியாய் திண்ணமாகும் !!


-சுந்தர்.ப 

பகை சாடும் புலிகள் - கவி பாடும் விந்தை !!



பகை சாடும் புலிகள் - கவி பாடும் விந்தை 
எம் தமிழ் குடியின் சொந்தமன்றோ !! 

தமிழ்ச்சீமை தனில் வாழும்
பெண்புலி கூட்டம் ஓன்று

பகை சாடல் தான் மறந்து
தமிழ்  தேடி ஓடுதடி !

புள்ளி மான் கூட்டம்  எல்லாம் 
தளிர்த்தொங்கி கூடுதடி

வீரம் சொன்ன பாரதிக்கும்- இது 
தோன்றாமல் போனதடி !

பாட்டிடைத் தலைவன் என்றும், 
பாட்டு எம் சொந்தம் என்றும்,

பாவலர் கூடம் எல்லாம் பதுங்கும் 
புலி சாட்டம் கண்டு !

பாரதிக்கும் கனவிதுவே !
சுதந்திரம் நின் கையில் பெண்ணே !! 


-சுந்தர்.ப