Aug 28, 2014

நாவல்...!
























வாசங்களில் வழிந்தோடும் -
நொடிநேர பாலியத்தை​,
பெட்டகத்தில் அடைகாக்கும் புத்தகத்தின் வாசம், 
என்னை தொட்டு திண்ணக் கேட்கிறது..!

உத்திர தோள்தாங்கும் -
தேக்குமர பாளிகளாய்,

அடிநெஞ்சில் வாசம் செய்யும், 
தென்பாண்டி தேசம் அவள்..!

இளவேனில் காலைகளின் திங்கள்  முகம் -
நாணும் மௌனம் அவள் முன்னுரை..!

நெறிகெட்டி உடைத்து ஒழுகும் 
கனத்த மேகம் அவள் மனக்குகை..!

தூரத்து முகம் காட்டி,
தொடுதூரம் விரல் நீட்டி,
பால் உண்டு, மஞ்சம் கூடி,
விந்துண்ணும் பிண்டமாய், 
கரு சுமந்தாள் என்னையே..! 

முக்காலம் உருண்டோடும், 
முழுமதியும் கரைந்தோடும்..!

வானம் பார்த்த பூமி உண்டு, 
ஈரம் இல்லா சாமியுண்டு...!

காவு ஈந்து பொங்கவச்சி 
வேண்டி நிற்கும் சாதியுண்டு...!

இடைநிறைத்த காலம் தாண்டி, 
விரல் கோர்த்த தந்தையுண்டு..!

தீராத உறவுகளும், நிழல் தூங்கும் திண்ணைகளும்,
ஏராளம் ஊரில் உண்டு..!

டு உண்டு, வலி உண்டு.. 
வற்றா கானல் ஓடும் கரிசல் ஓடை உண்டு...!

திருவிழா கூடங்களும், 
திரிசங்கு மாடங்களும் !

மணிதுளிக்கு ஒன்றாய் நிறம் மாறும் 
காலங்களும் கதை செல்லும்...!

தாசியும், தாரமும் -
தாய் உண்ணும் சேயுமாய் !

மங்கையின் ஆழம் உண்டு, 
முந்தானை நீளம் உண்டு..!

பாடம் தொலைத்து, பாதைமாறி 
கலிதீண்ட காமம் சாடி..

வீரம், ஈணம், துரோகம் கூடி,
விரயமாகும் மனித ஓடம்..!

சலனமில்லா காணல் மேலே 
பயணமாகும் காதை இங்கே..!

அன்றாட மாந்தரும் நெஞ்சோடு கூடுவார்,
ரீங்கார கோர்வையாய் நெடுநாவல் ஓடிடும்..!

கதைகள் யாவும் கதைகளல்ல
கரு உடைக்கும் மழலைதானே..!

விதைகளாய் மனம் விதைத்தால், 
நரம்பிலும் ஊறிச்சாகும் !
கதைகளும் உதிரம் ஆகும்..!

சுந்தர்.ப 

Aug 27, 2014

கடைவிழி காட்டி நின்றாள்..!





நான் மாடக்கூடலுக்குள், 
கதை செல்லும் ஊடலுக்குள் !

முற்றம் மணம் நிறைக்கும் -
கதம்பக்கூடைகளும்..! தை மிஞ்சிப் போனபின்னும், 
வழிந்தோடா மார்கழியாய்..!

முழங்கால் முறை செய்ய, 
மஞ்சள் திரை ஓடி !

ஊமத்தம் பூ உதிரும் -
வைகை நீராடி..! குழல் சிந்தும் தேனோடு -
வாரிப்பூ சூடி,

மாமன் தேரோடும் வழி -
நீளக்காத்து நின்றாள்..! உச்சி முகர்ந்துண்ணும் -
செஞ்சாந்து கோலங்களும்,

நெற்றி வழிந்தொழுகும் -
வியர்வை நாளங்களும்..,

ஒற்றைப் பனைமரத்தின் இடை -
உரசும் மாங்கொம்பாய்..

பூத்து காய்காய்த்து,
வண்டுண்ணும் மாங்கனியாய்...! கூரைப் பட்டுடுத்தி, 
ஒய்யார மையிட்டு !

காதல் அதில் கசிய, 
கடைவிழி காட்டி நின்றாள்..!
மாமன் கண் முன்னே -
தாவணி போட்ட நெஞ்சு,

காமன் கணைமீட்டும் -
செங்கரும்பு ஆனதிங்கு...!
முற்றத்து மழை சிப்பும், 
தாழ்வாரப் பூவிரிப்புமாய் !

நின் திமிர் மிஞ்சும் வெட்கம், 
என் துயில் தின்னப்பார்க்குதடி...!!

சுந்தர்.ப